🏛காஞ்சிபுரம் அருகே தனியார் 🚌பேருந்து கவிழ்ந்து விபத்து😱

✍இளவேனில்🌄

🏛காஞ்சிபுரம் மதுராந்தகத்திலிருந்து 👥50 பயணிகளுடன் காஞ்சிபுரம் நோக்கி தனியார் 🚌பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டலம் என்ற இடத்தில் 🚌பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நிலை தடுமாறி 🛣சாலை பகுதியில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது😱. இது குறித்து தகவல் அறிந்த 👮போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் சிக்கியுள்ளவர்களை 👥பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர். இந்த விபத்தில் 👥30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்😨. அதாவது 👩22 பெண்கள், 10க்கும் மேற்பட்ட ஆண்கள், 🤕காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள 🏥மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு 💉சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிக அளவில் பயணிகள் ஏற்றிச்செல்லப்பட்டதே இந்த விபத்துக்கு காரணம்😯 என கூறப்படுகிறது. அதிகமான 🚌பேருந்துகள் அப்பகுதியில் இயக்கப்படாததும், இதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது🗣.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬