சென்னை 🏛பெசண்ட் நகர் 🌊கடற்கரையில் இளைஞர் 🔪கொலை வழக்கில் 👥10 பேர் கைது⛓

✍இளவேனில்🌄

🏛சென்னை பெசண்ட் நகர் ⛪வேளாங்கண்ணி ஆலய தேர்பவனி விழா🎉 கடந்த 📆7ம் தேதி நடைபெற்றது. 👥குடும்பத்துடன் திருவிழா காண வந்த செனாய் நகரை சேர்ந்த 👨பென்னி ராஜ் என்பவர் ராட்டினம் சுற்றிவிட்டு வருவதாக கூறி🗣 சென்றுள்ளார். ஆனால் 🌊கடற்கரைக்கு சென்று நண்பர்கள் இருவருடன் சேர்ந்து 🍾மது அருந்திய 👨பென்னி ராஜ் அங்கு மறைவான இடத்திற்கு சிறுநீர் கழிக்க சென்றுள்ளார்😯. அப்போது அங்கு மற்றொரு கும்பலை சேர்ந்த 11 பேர் மது அருந்தி கொண்டிருந்த நிலையில், பென்னி ராஜை அவர்கள் அங்கிருந்து வேறு இடத்திற்கு செல்லுமாறு கூறியுள்ளனர்😳. ஆனால் 👥இருதரப்பினருமே 🍾போதையில் இருந்ததால் வாக்குவாதம்🗣 ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது😱. இதில் 😡ஆத்திரமடைந்த 11 பேர் கொண்ட கும்பல் பென்னி ராஜை 🔪கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் 🤕பலத்த காயமடைந்த பென்னி ராஜ் 🏥மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்😟. இது குறித்து வழக்கு பதிவு செய்து 👮போலீசார் விசாரணை🗣 நடத்தியதில் 👥10 கைது⛓ செய்யப்பட்டுள்ளனர். கைது⛓ செய்யப்பட்டவர்கள் மீது ஏற்கனவே கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாக🙄 தகவல்கள் வெளியாகியுள்ளன😨.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬