💺ஜெயலலிதாவின் 71வது 🎂பிறந்தாநாளையொட்டி 🌳71 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்🎉

✍இளவேனில்🌄

கடந்த 📆பிப்ரவரி மாதம் 24ம் தேதி 💺ஜெயலலிதாவின் 🎂பிறந்தநாளில், 🛣காமராஜர் சாலையில் உள்ள🗿பாவேந்தர் பாரதிதாசன் சிலை அருகில் 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல் மரக்கன்றினை நட்டு வைத்து இத்திட்டத்தை தொடங்கி🎉 வைத்தார். இந்நிலையில் இத்திட்டத்திற்காக 💰198 கோடியே 57 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி 🏛தமிழக அரசு அரசாணை📜 வெளியிடப்பட்டுள்ளது. அதில் இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் ஊரகப்பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் 🏫பள்ளி கல்லூரிகள், பூங்காங்கள், அரசுக்கு சொந்தமான இடங்கள், வனப்பகுதிகள் என அனைத்து இடங்களிலும் 🌳மரங்களை நட்டு சுற்றுச்சூழலை சமன்படுத்தி, பசுமையான சூழலை உருவாக்க👏 திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.
இதனை தொடர்ந்து, 👴மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி👍 திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 🌳64 லட்சம் மரக்கன்றுகளும், வனத்துறை சார்பில் 7 லட்சம் மரக்கன்றுகளும் நடப்பட்டு🙂 அதனை பராமரித்திட வேண்டும் என 🏛தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது⚖. மேலும் இந்த பணிகளை விரைவில் தொடங்கி🎉 குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை 🤵இயக்குநர் அனைத்து 🏛மாவட்ட 👮அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்⚖.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬