புதிய 📚கல்விக் கொள்கை 📆நவம்பர் 11ல் வெளியிடுவதாக கூறப்படுகிறது😯

✍இளவேனில்🌄

🇮🇳இந்தியாவுக்கான புதிய 📚கல்விக் கொள்கை வெளியிடுவதற்காக முன்னாள் இஸ்ரோ தலைவர் 🤵கஸ்தூரி ரங்கன் தலைமையில் 📆2017ல் 👥குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கடந்த 📆ஜூன் 1ல் தேசிய 📚கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை📜 வெளியிட்டது. இதில் இந்தி கட்டாயம்😳 என்ற மும்மொழி கொள்கைக்கு தமிழகம் உள்ளிட்ட சில 🏛மாநிலங்கள் எதிர்ப்பு😡 தெரிவித்தன. இதனால் அப்பகுதியை மட்டும் நீக்கி🚫 புதிய வரைவு கொள்கையை ✍திருத்தி வெளியிட்டது. அதனையடுத்து, வரைவு கொள்கை குறித்து 👥பொதுமக்கள் ஆலோசனை🤔 வழங்க 📆ஆகஸ்டு 15 வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. இதில் 2 லட்சத்திற்கும் அதிகமான கருத்துகள்🗣 கிடைத்ததாக மத்திய அமைச்சர் 🤵ரமேஷ் பொக்ரியால் கூறினார். இந்த கருத்துகளை ஆய்வு👀 செய்ய 15 குழு அமைக்கப்பட்டது😯. இந்த குழு வரைவு அறிக்கையில்📜 மாற்றம் மேற்கொள்வது குறித்து 🏛மத்திய அரசுக்கு அறிக்கை வழங்கியது. திருத்தப்பட்ட இறுதி வரைவு அறிக்கையை 📆செப்., 25ல் நடக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை🤔 நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ✍ஒப்புதல் அளித்தவுடன் புதிய 📚கல்விக் கொள்கையை தேசிய கல்வி தினமான 📆நவம்பர் 11ல் வெளியிட முடிவு செய்துள்ளதாக 🏛மத்திய 👤மனிதவள அமைச்சக 🤵அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்📣.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬