🤵விமானிகள் வேலை நிறுத்தம்💪 காரணமாக ✈ விமான சேவை பாதிப்பு😨

✍இளவேனில்🌄

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 👥விமானிகளின் வேலை நிறுத்தப் போராட்டத்தால்💪 சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் செல்லவேண்டிய விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 💸சம்பளத் தகராறு காரணமாக ஏற்பட்டுள்ள இந்த வேலை நிறுத்தத்தால் பல்லாயிரக்கணக்கான பயணிகளின் திட்டங்களில் பாதிப்பு😟 ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூரில், சாங்கி ✈ விமான நிலையத்தைவிட்டு இன்று காலை புறப்பட வேண்டியிருந்த ‘பிஏ12’ விமானத்தின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது🙄. அத்துடன் லண்டனிலிருந்து இங்கு இன்றிரவு ⌚10.35 மணிக்கு வரவேண்டிய ‘பிஏ12’ விமானச்சேவை ரத்து🚫 செய்யப்பட்டுள்ளது. ✈ பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் 🤵விமானிகள் சங்கம், இந்த வேலை நிறுத்தம் தொடர்பான அறிவிப்புக் 📄கடிதத்தைக் கடந்த 📆ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. இன்றைக்கும் நாளைக்கும் நடைபெறும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அடுத்ததாக 📆செப்டம்பர் 27ம் தேதி மறுபடியும் வேலை நிறுத்தப் போராட்டம்💪 நடைபெறவுள்ளது😳. வேலை நிறுத்தம் பற்றி 👥பயணிகளுக்குச் சரியான முன்னறிவிப்பு🔈 கொடுக்காததன் காரணமாக 💪பிரிட்டிஷ் ஏர்வேஸ் 😡கடுமையான விமர்சனங்களுக்கு🗣 ஆளாகியுள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬