🏛ஆந்திரா அருகே படகு மீது 🚢சரக்கு கப்பல் மோதல்😱

  |   Tamil News B

✍இளவேனில்🌄

சென்னை காசிமேட்டை சேர்ந்த சின்னதுரை என்பருக்கு சொந்தமான ⛵விசைப்படகில் 11 🐠மீனவர்கள் 📆4 நாட்களுக்கு முன்பு ஆந்திரா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் நேற்று காலையில் ஆந்திர எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த 🚢சரக்கு கப்பல் ஒன்று விசைப்படகில் நேருக்கு நேர் மோதியது😳. இதில் விசைப்படகு கவிழ்ந்து சேதம் அடைந்தது😟. இதனால் அதிர்ச்சியடைந்த படகில் இருந்த 11 மீனவர்களும், 🌊கடலில் குதித்தனர். நடுக்கடலில் தத்தளித்த அவர்களை அந்த பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மீட்கப்பட்டதையடுத்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு நேற்று கரை திரும்பினர்😯. இதனையடுத்து 🌊கடலில் மூழ்கிய படகினை மீட்டு தர வேண்டும், சேதம் அடைந்த படகிற்கு 💸நஷ்டஈடு பெற்றுத்தர வேண்டும் என்று 👮போலீசில் விசைப்படகு உரிமையாளர் புகார் அளித்துள்ளார். ⛵விசைப்படகு மீது மோதிய சரக்கு 🚢கப்பல் குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை🙄 என்று மீனவர்கள் கூறியுள்ள நிலையில் போலீசார் இது குறித்து தற்போது விசாரணை🗣 நடத்தி வருகிறார்கள்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬