🤵சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குநருக்கு 💸ரூ.1 லட்சம் அபராதம்-🏛உச்சநீதிமன்றம்

  |   Tamil News B

✍இளவேனில்🌄

🏛பீகார் மாநிலம் முசாபர்பூர் உள்ளிட்ட 🏨16 காப்பகங்களில் 👩சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், 🇮🇳நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை😱 ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, அப்போதைய 🤵சிபிஐ இணை இயக்குநர் ஏ.கே.சர்மா தலைமையிலான 👥குழு விசாரணை🗣 மேற்கொண்டது. இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வினருக்கு தொடர்பு உள்ளது😳 என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சர்மாவை பணியிடமாற்றம் செய்ய கூடாது🚫 என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது🔈. இந்த சூழலில் சிபிஐ இடைக்கால இயக்குநராக 🤵நாகேஸ்வர ராவ் பொறுப்பேற்றார்😯.
அவர் கடந்த 📆ஜனவரி 17ஆம் தேதி 🤵ஏ.கே.சர்மாவை அதிரடியாக 🏛மத்திய 🏦ரிசர்வ் காவல் படைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்⚖. இந்த இடமாற்றத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், நாகேஸ்வர ராவ் மன்னிப்பு🙏 கேட்டு 🏛உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் ✍எழுதியிருந்தார். இந்நிலையில் இன்று 🏛நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரது மன்னிப்பினை நீதிமன்றம் ஏற்க மறுப்பு🚫 தெரிவித்துவிட்டது. மேலும், இந்த தவறு அவரது பணி வரலாற்றில் இடம்பெறும் என்றும், நாகேஸ்வர ராவ் 💸ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்⚖. இன்று மாலை வரை நீதிமன்ற அறையில் அமர்ந்திருக்க வேண்டும் என்றும் 🏛உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬