🏛நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாயின் 📸முழுஉருவப் படம்👏

  |   Tamil News B

✍இளவேனில்🌄

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முழுஉருவப் 📸படத்தினை, 🏛நாடாளுமன்ற மைய மண்டபத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்👏. இந்த நிகழ்ச்சியில்🎉, பிரதமர் மோடி, 👥மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்😯. பின்னர் இந்த நிகழ்ச்சியில்🎉 பேசிய மோடி🎙, "நீண்ட அரசியல் வாழ்வுக்கு சொந்தக்காரரான வாஜ்பாய், பெரும்பாலான காலத்தை எதிர்க்கட்சி வரிசையில் செலவிட்டவர். எந்த நிலையிலும் கொள்கைகளில் இருந்து ஒருபோதும் மாறாத வாஜ்பாய், பொதுநலனுக்காக அயராது பாடுபட்டவர்💪" என்று புகழாரம் சூட்டினார். மேலும், "எதிர்க்கட்சிகளை விமர்சித்தவர்😐 என்றாலும், இதயத்தில் எதிர்க்கட்சிகள் மீது எவ்வித வெறுப்பும்😡 இல்லாதவர்🚫 என்பதற்காகவே வாஜ்பாய் நினைவுகூரப்படுவார்👍" என்று வாஜ்பாய் குறித்து காங்கிரஸ் சார்பில் பேசிய குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்🗣.

image credit : http://v.duta.us/k6125wAA

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬