மாதாந்திர 💐பூஜை-⛰சபரிமலை நடை இன்று திறப்பு😯

  |   Tamil News B

✍இளவேனில்🌄

⛰சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது 👩பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று 🏛உச்சநீதிமன்றம் கடந்த 📆செப்டம்பா் மாதம் தீா்ப்பு⚖ வழங்கியது. தீா்ப்பு வெளியான பின்னா் ஒவ்வொரு முறை கோவில் நடை திறக்கப்படும் போதும், கோவிலில் 👩இளம் பெண்கள் அனுமதிக்க எதிா்ப்பு தொிவித்து😡 போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மண்டல பூஜை நிறைவு பெற்று கடந்த மாதம் ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்டது. அதன் பின்னா் மாதாந்திர 💐பூஜைகளுக்காக கோவில் நடை இன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது. 📆17ம் தேதி வரை கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும் நிலையில் பல்வேறு 🙏பூஜைகள் நடைபெற உள்ளன😯. இதனையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன👍. குறிப்பாக நிலக்கல், சன்னிதானம், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக 👮காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬