✈வெளிநாடு வாழ் 🇮🇳இந்தியர்களின் 💍திருமணத்திற்கு புதிய கட்டுப்பாடு👍-மசோதா தாக்கல்📜

  |   Tamil News B

✍இளவேனில்🌄

கடந்த 📆ஆண்டு ✈வெளிநாடு வாழ் 🇮🇳இந்தியர்கள், 💍திருமணத்திற்கு பிறகு கொடுமைப்படுத்தியதாக 🏛உச்சநீதிமன்றத்தில் 👥நூற்றுக்கணக்கான 👩பெண்கள் வழக்கு தொடர்ந்தனர். மேலும் இது தொடர்பாக கடந்த மூன்று 📆ஆண்டுகளில், வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு சுமார் 4,300 புகார்கள் வந்துள்ளதாக தகவல் வெளியானது. இதனால் வெளிநாடு வாழ் இந்தியர்களின் 💍திருமணங்களில் கட்டுப்பாடுகள் கொண்டு வர 🏛மத்திய அரசு முடிவு செய்தது. இந்நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணத்திற்கு கட்டுப்பாடு விதிக்கும் புதிய 📜மசோதாவை மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் 🤵சுஷ்மா சுவராஜ் தாக்கல் செய்தார். இந்த மசோதாவின்படி வெளிநாடு வாழ் இந்தியர்கள், 🇮🇳இந்திய 👩பெண்ணை திருமணம் செய்தால் திருமணமாகி 📆30 நாட்களுக்குள் அதனை பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் அவர்களின் 🛂பாஸ்போர்ட் திரும்ப பெறப்படும் என கூறப்பட்டுள்ளது🗣.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬