ஸ்விக்கி நூடுல்ஸில் கலந்த ரத்தக்கறை படிந்த பேண்டேஜ்😳

  |   Tamil News B

✍இளவேனில்🌄

சென்னையைச் சேர்ந்த 👨பாலமுருகன் என்பவர் ஞாயிற்றுக்கிழமை ஸ்விக்கி மூலம் சேலையூரில் உள்ள 🏨'சாப் இன் ஸ்டிக்ஸ்' என்ற ரெஸ்டாரண்ட்டில் நூடுல்ஸ் ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி செய்யப்பட்ட நூடுல்ஸ் பார்சலில் ரத்தக்கறை படிந்த பேண்டேஜ் கிடைந்ததைப் பாதி சாப்பிட்ட பின்பு அதில் ரத்தக்கறை படித்த பேண்டேஜ் கலந்திருப்பதைப் பார்த்திருக்கிறார்😨. உடனே இது பற்றி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், "ஸ்விக்கியிடம் புகார் கூற முயன்றால் அவர்களைத் போனில் தொடர்புகொண்டு பேச முடியவில்லை😓. சாட் செய்யும் வசதி மட்டும் இருக்கிறது. ரெஸ்டாரண்ட் மற்றும் ஸ்விக்கி ஆகிய இரு தரப்பையுமே குற்றம் சாட்டுகிறேன்😡" என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து 🏨ரெஸ்டாரண்ட்டை தொடர்புகொண்டபோது, "பார்சல் செய்யும் 👥ஊழியர்களில் ஒருவருக்கு கையில் காயம் ஏற்பட்டிருந்தது😳. அசம்பாவிதமாக அவரது கையில் இருந்த பேண்டேஜ் பார்சலுக்குள் விழுந்திருக்கிறது😱. புகாரைப் பெற்ற பாலமுருகனுக்கு 💸பணத்தைத் திருப்பித்தர தயாராக இருப்பதாகக் கூறினோம். ஆனால் அவர் இதே போல மறுபடியும் செய்யாமல் இருங்கள் என்றுதான் கூறினார்🙄. அவர் எங்களிடம் தொடர்ந்து 💻ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்தான்." என்று விளக்கம்🗣 அளித்துள்ளனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬