வரும் 📆22ம் தேதி முதல் தொடர் போராட்டம்💪-ஜாக்டோ ஜியோ🔈

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏛மதுரை ஒத்தக்கடையில் ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு 👥கூட்டம் நேற்று நடந்தது. இதன் முடிவில், ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சேகர், சுரேஷ், செல்வராஜ் ஆகியோர் கூட்டாக 📰நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள்🎙, "🏛நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டதன் காரணமாக, எங்களின் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. வருகிற 📆11ந் தேதிக்குள் 7 அம்ச 🙏கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால், இந்த மாதம் 📆22ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்குவோம்💪. தொடக்கக்கல்வியை உயர்நிலைக்கல்வியுடன் இணைக்கும் முடிவை கைவிடவில்லை என்றால் கல்வித்துறை அமைச்சருக்கு கருப்புக்கொடி🏴 காட்டுவோம். அதேபோல 🏫பள்ளிக் கல்வித்துறை செயலாளரை வேறு துறைக்கு மாற்ற வேண்டும்😯. அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி. வகுப்புகள் தொடங்குவதை கைவிட வேண்டும்😳" என்று அவர்கள் கூறினர். தொடர்ந்து பேசிய அவர்கள், "நாடுதழுவிய பொது வேலை நிறுத்தப்போராட்டத்திற்கும், 👥ஜாக்டோ-ஜியோவுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை🚫" என்பதனை தெரளிவுபடுத்தினர்👍 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬